English | Sinhala

eZPal

இலங்கையில் முதல் தடவையாக சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கென LANKAQR மூலமாக கட்டணம் செலுத்துதலை eZ Cash அறிமுகப்படுத்தியுள்ளது.

அதற்கமைய நீங்கள்;

  • சிறிய/நடுத்தர வர்த்தகர்
  • வர்த்தக நிலைய உரிமையாளர்
  • ஒன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தும் ஆசிரியர்
  • உங்கள் தயாரிப்பு பொருட்களை உங்களுடைய பிரத்தியேக முகநூல் (Facebook) பக்கத்தின் ஊடாகவோ, வலைத்தளத்தினூடாகவோ விற்பனை செய்தல் அல்லது வாடிக்கையாளர்களுக்கு ‘டெலிவரி’ செய்யும் வசதி கொண்டவர்.
  • ஓட்டோ உரிமையாளர்

இவர்களுள் ஒருவராக இருப்பின் அல்லது ஞாயிற்றுக்கிழமை / வெள்ளிக்கிழமை சந்தைகளில் மரக்கறி விற்பனை செய்பவராயினும் உங்களுக்கு இந்த புதிய வழிமுறையிலான கட்டணம் அறவிடும் முறை மிகவும் பொருத்தமானதாகும்.

தற்போது eZ Cash வாடிக்கையாளர்கள் App இனை நீங்கள் துரிதமாக டவுன்லோட் செய்து எந்தவகையிலான கட்டண செலுத்தல் முறையையும் LANKAQR மூலம் செயற்;படுத்த முடியும். eZ Cash வாடிக்கையாளர் App இனை Paly Store அல்லது App Store இல் டவுன்லோட் செய்து, உங்கள் வாடிக்கையாளர்களின் கட்டணங்களை செலுத்துவதற்கான வழிமுறைகளை செயற்படுத்திக்கொள்ள முடியும். இது மிகவும் வசதியான, இலகுவான முறையாகும்.

  • படிமுறை 01 :- eZ Cash வாடிக்கையாளர் App இனை Play Store/ App Store மூலம் டவுன்லோட் செய்யலாம்.
  • படிமுறை 02:- eZ Cash வாடிக்கையாளர் App ஊடாக பதிவு செய்துகொள்ளுங்கள்.
  • படிமுறை 03:- App இல் MyQR என தோன்றியதும் உங்கள் வாடிக்கையாளர்களுடன் கட்டணம் செலுத்தும் முறையை ஆரம்பியுங்கள்.

eZ Cash Customer App இல் LanakaQR மூலமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து துரிதமாக கட்டணங்களை பெற்றுக்கொள்வதற்கு வசதியாகவும் இலகுவானதுமான முறையாக அமைகின்றது.

eZ Cash டிஜிட்டல் வழிமுறையை கையாள்வதன் மூலம் இனிமேலும் பண கொடுக்கல் வாங்கல்களில் எவ்வித சிரமங்களுக்கும் முகங்கொடுக்க வேண்டியிருக்காது. உங்களது eZ Cash Wallet இல் LankaQR குறியீட்டின் மூலம் பணப்பரிமாற்றம் குறித்து உங்களது தொலைபேசியில் அறிந்து கொள்வதற்கும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கும் கீழ் காணப்படும் எந்தவொரு கட்டணம் செலுத்தல் வழிமுறையையும் நீங்கள் கையாள முடியும்.

  • வேறொரு eZ Cash Wallet இலிருந்து பெறல்.
  • Mobile Banking App அல்லது FinTech App ஊடான கட்டணம் செலுத்தல்.
  • கிரெடிட் /டெபிட் கடனட்டைகள் ஊடான கட்டணம் செலுத்துதலை Mobile Banking App இல் இணைத்தல்.

நாளொன்றிற்க்கு வரையறுக்கப்பட்டுள்ள பணப்பரிமாற்ற அளவு

உங்களுடைய eZ Cash வாடிக்கையாளர் Wallet கொண்டுள்ள வரையறை அளவு வரையில்.

பரிமாற்ற வரையறை

நீங்கள் 'Power Wallet' ஐ கொண்டவராயின் ரூபா 50,000 வரையில் நாளொன்றிற்கு பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும்.

நீங்கள் 'Classic Wallet' கொண்டவராயின் ரூபா 10,000 வரையில் நாளொன்றிற்கு பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும்.

நாளொன்றிற்கான பரிமாற்ற வரையறை ரூபா 50,000 ஆக்க வேண்டுமாயின், அருகாமையில் உள்ள எந்தவொரு Dialog சேவை வழங்குனர் நிறுவனத்திற்கும் சென்று நாளொன்றிற்கான வரையறையை ரூபா 50,000 ஆக அதிகரிக்க செய்யுமாறு கோரி உங்களுடைய Wallet ஐ 'Power Wallet' ஆக மாற்றீடு செய்துகொள்ள முடியும்.

பண பரிமாற்ற கட்டணம்

LANKAQR ஊடாக கட்டணங்களை பெற்றுக்கொள்வதன் காரணமாக உங்களிடம் இருந்து 0.5% சேவை கட்டணம் அறவிடப்படும்.

பொதுவான பரிமாற்ற சந்தர்ப்பங்கள்

  • விற்பனையாளர் eZ Cash பணப்பரிமாற்ற App ஐ செயற்படுத்துவார் (Log ஆதல்)
  • MYQR ஐ தெரிவு செய்வார்.
  • MYQR ஐ வாடிக்கையாளருக்கு காட்டுவார்/பகிர்வார்
  • MYQR ஐ வாடிக்கையாளர் தமது கட்டணம் செலுத்தல் App மூலம் ஸ்கேன் செய்வார் .
  • வாடிக்கையாளர் கட்டணம் செலுத்தும்போது கட்டணம் செலுத்தல் App இனுள் பிரவேசித்து செலுத்துகின்ற கட்டணத்தொகையை ENTER செய்து பரிமாற்றத்தை உறுதி செய்வார்.
  • கட்டணம் செலுத்தப்பட்டதற்கான உறுதிப்படுத்தல் அடங்கிய குறுந்தகவலை (SMS) விற்பனையாளர் உடனடியாக பெற்றுக்கொள்வார்.
  • கட்டணம் செலுத்தப்பட்டதற்கான குறுந்தகவலையடுத்து விற்பனையாளர் பொருட்கள் / சேவையை உரிய வாடிக்கையாளருக்கு அனுப்புவார்/ வழங்குவார்.

மேற்குறிப்பிட்டவைக்கு மேலதிகமாக உங்களது eZ Cash Wallet மூலம் கீழ் காணப்படும் இன்னும் சில வழிமுறைகளிலும் கட்டணங்களை பெறமுடியும். உங்களுடைய வாடிக்கையாளர் / பயனாளிக்கு உங்கள் eZ Cash Wallet இலக்கத்தை (அது உங்கள் கைப்பேசி இலக்கம்) பரிமாறி ‘பணம் அனுப்பவும்’ என அதனூடே குறிப்பிட்டு உரிய பணத்தை பெற்றுக்கொள்ளவும்.

கீழ்காணும் வழிமுறைகள் மூலம் கட்டணங்களை பெருவதற்கு பணம் அறவிடப்படமாட்டது.

  • வேறு eZ Cash Wallet ஐ பெறுவதற்கு (‘பணம் அனுப்பவும்’ எனும் மாற்று வழியூடாக)
  • நாடளாவிய ரீதியிலுள்ள 20,000+ eZ Cash பணப்பரிமாற்ற முகவர்கள் ஊடாக ('Top Up' வழிமுறையின் மூலம்)
  • ஒன்லைன் பேங்கிங் (Online Banking) - ( மேலதிக விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) - https://www.ezcash.lk/topup-online-and-mobile-banking.php )
  • Mobile Banking Apps or other FinTech Apps.
  • CEFT transfers from Bank Accounts (Click here for more info - https://www.ezcash.lk/topup-online-and-mobile-banking.php )

 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

LANKAQR மூலம் கொள்வனவு நடைபெறும்போது குறித்த பணத்தை நான் எவ்வாறு பெறுவது?
வாடிக்கையாளறினால் செலுத்தப்படும் கட்டணத்தொகை அவரது Z Cash Wallet/ 3rd party FenTech- Mobile Bank App மூலம் கழிக்கப்படுவதுடன் அத்தொகை உங்களுடைய eZ Cash Customer wallet இல் சேர்க்கப்படும்.

எனக்கு பணம் கிடைக்க பெருவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்?
கட்டணம் செலுத்துதல் உடனுக்குடன் நடைபெறும். ஆகையினால் உங்களுக்குரிய கட்டணம் துரிதமாக கிடைக்கப்பெறுவதுடன் உங்களுடைய eZ Cash Wallet கைபேசி இலக்கத்திற்கு இதற்கான உறுதிப்படுத்தல் குறுந்தகவல் (SMS) கிடைக்கப்பெறும்.

பணப்பரிமாற்றத்திற்கு பிரத்தியேக கட்டணம் அறவிடப்படுமா?
விற்பனையாளர் என்ற ரீதியில் LANKAQR சேவையை பயன்படுத்துகின்றமைக்காக முழுப்பரிமாற்ற தொகையில் இருந்து 0.5% உங்களிடம் அறவிடப்படும். (உதாரணம்- உங்களுக்கு ரூபா 1,000 கட்டணம் கிடைக்க பெற்றிருக்குமாயின் பரிமாற்ற சேவை கட்டணமாக ரூபா 5.00 உங்களுடைய eZ Cash Wallet இலிருந்து கழிக்கப்படும்)

இந்த சேவைக்காக எனது வாடிக்கையாளரிடமிருந்து கட்டணம் அறவிடப்படுமா?
இந்த பரிமாற்றலுக்காக உங்களுடைய வாடிக்கையாளர் / பயனாளியிடமி;ருந்து எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது.

Will my customer be charged for using this service?
Your client/ customer will not be charged for this transaction

எந்தவொரு FinTech App- Mobile App கொண்டுள்ள வாடிக்கையாளரும் MYQR ஐ (LANKAQR) ஸ்கேன் செய்வதன் மூலம் எனக்கான கட்டணத்தை செலுத்த முடியுமா?
ஆம், eZ Cash கைபேசி App மற்றும் ஏனைய 3ஆம் தரப்பு FinTech/ மொபைல் பேங்கிங் App ஆகியன LANKAQR குறியீட்டை உள்வாங்குமாயின் MYQR ஐ பயன்படுத்தி உங்களுக்கான கட்டணத்தை அவர்கள் செலுத்த முடியும்

LANKAQR ஊ;டாக வாடிக்கையாளர் ஒருவர் எனக்கு செலுத்த கூடிய அதிகூடிய கட்டணத்தொகை எவ்வளவு?
உங்களுடைய eZ Cash Wallet ஆனது 'Power Wallet' ஆயின் நாளொன்றிற்;கு ரூபா 50,000 வரையிலும் செலுத்த முடியும்.
உங்களுடைய eZ Cash Wallet ஆனது 'Classic Wallet' ஆயின் நாளொன்றிற்கு ரூபா 10,000 ற்கான கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ள முடியும்.

என்னுடைய LANKAQR ஐ ஸ்கேன் செய்தல் சாத்தியப்படாத சந்தர்ப்பத்தில் நான் என்ன செய்யலாம்?
உங்களுடைய App இலோ அல்லது LANKAQR குறியீட்டு ஸ்கேனிலோ ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின், பாவனையாளர் துரித சேவையான 7111 இலக்கத்திற்கு தொடர்புகொண்டு அறியப்படுத்த முடியும்.

பணப்பரிமாற்ற செயற்பாடு செயலிழக்குமாயின்?
வேறொரு eZ Cash வாடிக்கையாளர் Wallet இலிருந்து பணப்பரிமாற்றம் நடந்திருக்குமாயின், eZ Cash துரித சேவை 7111 இலக்கத்தில் தொடர்புகொண்டு ஆலோசனை பெற முடியும்.
மூன்றாம் நபரின் FinTech / மொபைல் பேங்கிங் App ஊடான பரிமாற்றமாயின் குறித்த உங்களுடைய வாடிக்கையாளர், உரிய கைபேசி App துரித சேவையுடன் தொடர்பு கொண்டு அறியப்படுத்த வேண்டும்.

LANKAQR ஊடாக கொள்வனவில் ஈடுபடும் வாடிக்கையாளர் ஒருவர் தான் செலுத்திய கட்டணத்தை மீளப்பெற விரும்பினால் அதனை மீள வழங்குதல் எவ்வாறு நடைபெறும்?
வேறொரு eZ Cash வாடிக்கையாளர் Wallet ஊடாக உங்களுக்கான கட்டணம் கிடைக்கப் பெற்றிருக்குமாயின் நீங்கள் சில்லறை விற்பனையாளர்களுக்கான ஆலோசனை கருமபீடத்தை 0777456456 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள வேண்டும்.
மூன்றாம் தரப்பு App ஊடாக கட்டணம் செலுத்தப்பட்டிருக்குமாயின் உரிய தொலைபேசி சேவை வழங்குனரின் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறு வாடிக்கையாளரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.

மீள செலுத்தலுக்கு எவ்வளவு காலம் செல்லும்?
வேறொரு eZ Cash Wallet ஊடாக பணம் பெறப்பட்டிருக்குமாயின் : 1-2 நாட்கள் (Working Days) செல்லும்.
மூன்றாம் தரப்பினூடாக பணம் பெறப்பட்டிருக்குமாயின் 2-3 நாட்கள் (Working Days) செல்லும்.
கொடுக்கல் வாங்கல் மூன்றாம் தரப்பு App ஊடாக நடைபெற்றிருப்பின் உரிய கைப்பேசி App வழங்குனரின் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறு வாடிக்கையாளருக்கு தெரியப்படுத்துங்கள். அவ்வாறே, நீங்கள் நமது சில்லறை விற்பனையாளர்களுக்கான ஆலோசனை கரும பீடத்திற்கு அறியப்படுத்தல் வேண்டும்.