Instructions

English

eZ Cash பணப்பையின் ஊடாக நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து ரீலோடுக்கும் 3 மாதங்களுக்கு போனஸ் ரீலோடினை பெற்றுக்கொள்ளுங்கள்

உங்களுடைய போனஸ் ரீலோடினை பெற்றுக்கொள்ளுங்கள்

  • #111# டயல் செய்யுங்கள் அல்லது eZ Cash கணக்கினை Open செய்யுங்கள்
    ரீலோட்
    படிமுறை 1: #111# டயல் செய்து ரீலோட் என்பதை தெரிவு செய்யுங்கள்
    படிமுறை 2: மொபைல் இலக்கத்தை பதிவு செய்யுங்கள் (Dialog / Etisalat / Hutch / Airtel)
    படிமுறை 3: தொகையினை பதிவு செய்யுங்கள்
    படிமுறை 4: PIN இலக்கத்தை பதிவு செய்து பரிமாற்றத்தினை உறுதிப்படுத்துங்கள்
    படிமுறை 5: பற்றுச்சீட்டினை SMS ஊடாக பெற்றுக்கொள்வீர்கள்

    eZ Cash app
    படிமுறை 1: eZ Cash app இல் Login ஆகுங்கள்
    படிமுறை 2: பில் கொடுப்பனவு மற்றும் ரீலோட் என்பதை தெரிவு செய்யுங்கள்
    படிமுறை 3: உங்களுடைய PIN இலக்கத்தை பதிவு செய்யுங்கள்
    படிமுறை 4: கணக்கு வகையினை தெரிவு செய்யுங்கள் (Dialog, Etisalat, Hutch அல்லது Airtel)
    படிமுறை 5: மொபைல் இலக்கத்தை பதிவு செய்யுங்கள்
    படிமுறை 6: தொகையினை பதிவு செய்து ‘Pay’ என்பதை க்ளிக் செய்யுங்கள்
  • eZ Cash கணக்கின் ஊடாக உங்களுடைய Dialog முற்கொடுப்பனவு இணைப்பினை ரீலோட் செய்யுங்கள்
  • உங்களுடைய முற்கொடுப்பனவு மொபைல் எண்ணுக்கு 25% போனஸினை பெற்றுக்கொள்ளுங்கள்
    உ-ம்: திருமதி பெரேரா தன்னுடைய முற்கொடுப்பனவு மொபைல் எண்ணுக்கு eZ Cash ஊடாக ரீலோட் பரிமாற்றத்தினை மேற்கொள்கின்றார். இந்த ரீலோடின் போது அவர் உடனடியாக 25% போனஸ் ரீலோடினை பெற்றுக்கொள்வார். அவருக்கு வழங்கப்பட்ட மொத்த போனஸ் ரீலோட் மாதத்திற்கு இலங்கை ரூபாய் 500 ஐ அடைந்தவுடன் அவருக்கு போனஸ் ரீலோட் கிடைக்காது. மேலும், இரண்டாவது மாதத்தில் தனது eZ Cash பணப்பையின் ஊடாக மீண்டும் ரீலோட் செய்யும் போது 15% போனஸ் ரீலோட் கிடைக்கும். மூன்றாவது மாதத்தில் 10% போனஸ் ரீலோட்.

கொடுப்பனவு காலப்பகுதி

2019 ஆகஸ்ட் 22ஆம் திகதி முதல் 2020 ஜனவரி 22ஆம் திகதி வரை

நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள்

  • இந்த கொடுப்பனவானது eZ cash வாடிக்கையாளர்களின் Dialog முற்கொடுப்பனவு ரீலோட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
  • மேலதிக ரீலோட் தொகையானது பதிவு செய்யப்பட்ட மொபைல் இலக்கத்திற்கு மட்டுமே வழங்கப்படும்.
  • அதிகபட்ச ரீலோட் பெறுமதி இலங்கை ரூபாய் 500.
  • பயன்படுத்தப்படும் சேனல்கள் USSD மற்றும் வாடிக்கையாளர் App ஆக இருத்தல் வேண்டும்.
  • வாடிக்கையாளர்கள் அதிகபடியாக பயன்படுத்தும் போது கண்காணிக்கப்படுவதுடன் நியாயமான பாவனையாளர் கொள்கையின் கீழ் அத்தகைய வாடிக்கையாளர்கள் அடுத்த மாத கொடுப்பனவில் இருந்து நீக்கப்படுவார்கள்.
  • இந்த கொடுப்பனவினை வேறு எந்தவைகயான கொடுப்பனவுகளுடனும் இணைத்து பயன்படுத்த முடியாது.
  • பிரச்சினைகள் அல்லது முரண்பாடுகள் காணப்படும் பட்சத்தில் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியினால் மேற்கொள்ளப்படும் முடிவே இறுதியானதாக கருதப்படும். எந்தவொரு நேரத்திலும் இந்த கொடுப்பனவினை நிறுத்துவதற்கான அதிகாரத்தினை நிறுவனம் கொண்டுள்ளது.

வாடிக்கையாளர் முறைப்பாடுகள்

விசாரணைகள் மற்றும் முறைப்பாடுகள் காணப்படின் eZCashHelpDesk@dialog.lk க்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்புங்கள் அல்லது 7111 க்கு அழையுங்கள்