top-up-from-bank-account

English | Sinhala

இப்போது நீங்கள் LankaQR செயல்படுத்தப்பட்ட நாடளாவிய ரீதியில் உள்ள விற்பனையாளர்களிடம் உங்கள் eZ Cash பணப்பையை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்யலாம்.

LankaQR என்பது eZ Cash இனால் வழங்கப்பட்ட ஒரு பொதுவான QR (விரைவான பதில்) ஆகும். இது டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி மூலம் இயக்கப்படுகிறது, இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்து eZ Cash வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்களிலிருந்து OTC கொடுப்பனவுகளை உடனடியாக எந்தவொரு eZ Cash அல்லது Fintech/மொபைல் பேங்கிங் மூலம் செயல்படுத்த முடியும்.

LankaQR, உடன், eZ Cash வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குகளிலிருந்து OTC (ஓவர் தி கவுண்டர்) பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும். பரிவர்த்தனை உடனடியாக செயலாக்கப்படுவதால் கவுண்டரில் பண கையாளுதல் இல்லாமையினால் இந்த முறை தொந்தர அற்றதாக காணப்படுகின்றது.

eZ Cash வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து eZ Cash மொபைல் பயன்பாடு அல்லது Fintech/ மொபைல் வங்கி பயன்பாடு (eZ Cash, HNB-Solo, FriMi போன்றவை) பயன்படுத்தி வணிகர்கள் LankaQR குறியீட்டை ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம். எந்தவொரு Lanka QR செயல்படுத்தப்பட்ட விற்பனையாளர்களிடமும் வாடிக்கையாளர் ஸ்கேன் செய்து பணம் செலுத்தியவுடன், விற்பனையாளர் உடனடியாக தங்கள் eZ Cash வியாபாரி பணப்பைக்கு நிதியைப் பெறுவார்கள். வாடிக்கையாளர் மற்றும் விற்பனையாளர்கள் இருவரும் பரிமாற்றத்தினை உறுதிப்படுத்திய SMS இனை பெறுவார்கள்.

பரிவர்த்தனை வெற்றிகரமாக முடிந்ததும், எஸ்எம்எஸ் பெறப்பட்டதும், வாடிக்கையாளர் அவர்கள் செய்த கட்டணத்திற்காக வணிகரிடமிருந்து பொருட்கள் / சேவைகளைப் பெற தொடரலாம்.

கட்டணம்

ஒரு வாடிக்கையாளராகஇ eZ Cash வாடிக்கையாளர்களுக்கு LankaQR தளத்தைப் பயன்படுத்துவதற்கு மேலதிக கட்டணங்கள் வசூலிக்கப்படாது.

பரிவர்த்தனை வரம்புகள்

eZ Cash வாடிக்கையாளர்கள் பணப்பையின் மிகுதி மற்றும் பணப்பையின் வரம்பு ஆகியவற்றை கொண்டு பரிவர்த்தனைகளை ஒரு நேரத்தில் செயல்படுத்தலாம் (eZ Cash வாடிக்கையாளர் பணப்பைகள் வழியாக)

 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. LankaQR மூலம் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் போது கட்டணம் வசூலிக்கப்படுகிறதா?
இல்லை. LankaQR மூலம் செலுத்தப்படும் கட்டணங்களுக்கு மேலதிக கட்டணம் வசூலிக்கப்படாது.

2. பரிமாற்றம் வெற்றிபெற எவ்வளவு காலம் எடுக்கும் ?
பரிமாற்றங்கள் நிகழ்நேரத்தில் செயல்படுத்தப்படும்.

3. நான் மற்றொரு 3 வது தரப்பு LankaQR சில்லறை விற்பனையாளர் இடத்தில் (eZ Cash விற்பனையாளர்களைத் தவிர) செலுத்த முடியுமா?
ஆம், நீங்கள் eZ Cash மொபைல் பயன்பாட்டைப் பயன்படுத்தலாம் மற்றும் மூன்றாம் தரப்பு LankaQR இயக்கப்பட்ட வணிகரிடமும் ஸ்கேன் செய்யலாம். அதாவது. Frimi / HNB Solo / iPay / Upay போன்றவை.

4. ஒரு eZ Cash விற்பனையாளரிடம் பணம் செலுத்த எனது கிரெடிட் கார்டு /டெபிட் கார்டைப் பயன்படுத்தலாமா?
eZ Cash மொபைல் App ல் கிரெடிட் / டெபிட் கார்டுகளை பயன்படுத்த முடியாது

5. ஒரு பரிமாற்றத்திற்கு செயலாக்கக்கூடிய அதிகபட்ச பரிமாற்ற பெறுமதி என்ன?
eZ Cash வாடிக்கையாளர் பணப்பை - பணப்பை வரம்பு
கிளாசிக் பணப்பை - ரூ. 10,000 அதிகபட்சம்
பவர் பணப்பை – ரூ. 50,000 அதிகபட்சம்

6. LankaQR மூலம் கொள்வனவு செய்ததற்கு பணத்தைத் திரும்பப் பெற வேண்டியிருந்தால் எவ்வாறு செயல்படுகிறது?
ஒரு eZ Cash விற்பனையாளர் பணப்பையில் பணம் செலுத்தப்பட்டிருந்தால்- அவர்கள் ezretailerhelpdesk@dialog.lk ஊடாக விற்பனையாளர் உதவி மையத்தை தொடர்புகொள்வார்கள்.
எந்தவொரு மேலதிக விபரங்களுக்கும் வாடிக்கையாளர்கள் eZ Cash துரித இலக்கமான 7111 ஐ தொடர்பு கொள்ளலாம்.
3 வது தரப்பு LankaQR விற்பனையாளர் மூலம் பணம் செலுத்தப்பட்டிருந்தால் - வாடிக்கையாளர் 7111 என்ற துரித இலக்கததை தொடர்பு கொள்ளுமாறு கோருங்கள்

7. கொடுப்பனவினை மீள் பெறல் செயல்முறைக்கு எவ்வளவு காலம் எடுக்கும்?
eZ Cash பணப்பை eZ Cash விற்பனையாளர் - 1-2 வேலை நாட்கள்
eZ Cash பணப்பை - 3ம் தரப்பு LankaQR விற்பனையாளர் – 2-3 வேலை நாட்கள்

8. ஒரு பரிவர்த்தனை தோல்வியுற்றால் நான் என்ன செய்வது?
பரிவர்த்தனை ஒரு eZ Cash வாடிக்கையாளர் பணப்பையிலிருந்து வந்தால்- 7111 இல் eZ Cash துரித இலக்கத்தை தொடர்பு கொள்ளுங்கள்
பரிவர்த்தனை 3 வது தரப்பு LankaQR விற்பனையாளரிடமிருந்து - வாடிக்கையாளர் ez Cash துரித இலக்கமான 7111 ஐ தொடர்பு கொள்ள வேண்டும்.
3 வது தரப்பு LankaQR விற்பனையாளர் தொடர்புடைய உதவி துரித இலக்கத்திற்கு அறிவிப்பார்.

9. எனது பயன்பாட்டின் மூலம் QR ஸ்கேன் தோல்வி அடைந்தால் நான் என்ன செய்வது?
பயன்பாடு அல்லது LankaQR குறியீடு தொடர்பான எந்தவொரு சிக்கலுக்கும் 7111 ஊடாக ez Cash துரித இலக்கத்திற்கு அழைக்கவும்