English | Sinhala

eZ Banking Service

  • இந்த சேவையினை தற்போது சம்பத் வங்கி கணக்குகளுக்கு பெற்றுக்கொள்ள முடியும் (வைப்பு செய்தல், மீள் பெறுதல்)
  • eZ Banking சேவையை வழங்கும் தெரிவு செய்யப்பட்ட eZ Cash விற்பனையாளர்களால் இந்த சேவை வழங்கப்படுகிறது.
  • நாடளாவிய ரீதியில் eZ Banking சேவையை வழங்கும் நிலையங்களை பற்றி அறிந்துக்கொள்ளMerchant List PDF க்கு செல்லுங்கள்.
  • இந்தச் சேவை சேமிப்பு/தனிப்பட்ட மற்றும் நடப்புக் கணக்குகளுக்குப் செல்லுபடியாகும்.
  • அனைத்து பரிமாற்றங்களும் அதே நேரத்தில் மேற்கொள்ளப்படும்.
  • நிலையான வங்கி நேரம் மற்றும் வங்கி விடுமுறை நாட்களிலும் eZ Banking முகவர்களின் ஊடாக இந்த சேவைகள் வழங்கப்படுகின்றன.
  • இந்த சேவைக்கு பொருந்தக்கூடிய அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச தினசரி வரம்புகள் பின்வருமாறு.
    குறைந்தபட்ச பெறுமதி (ஒரு பரிவர்த்தனைக்கு) அதிகபட்ச பெறுமதி பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையின் வரம்பு (தினசரி)
    வைப்பு ரூ. 500 ரூ. 50,000 3 பரிவர்த்தனைகள்
    பணம் மீள் பெறுதல் ரூ. 500 ரூ. 5000 3 பரிவர்த்தனைகள்
  • eZ Banking சேவை மூலம் பணம் வைப்பு செய்தல் மற்றும் மீள் பெறல் போன்றவற்றை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்கள் பின்வருவனவற்றை பூர்த்தி செய்ய வேண்டும்.
    பண வைப்பு - சொந்தக் கணக்கில் அல்லது ஏனைய சம்பத் வங்கி கணக்கில் பணத்தினை வைப்பு செய்தல் வேண்டும்.
    - விற்பனையாளர் தனது தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் மொபைல் இலக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும்
    - eZ cash பணப்பையினை வைத்திருத்தல் கட்டாயமில்லை
    பணம் மீள் பெறல் - கணக்கு வைத்திருப்பவர் eZ Banking வணிக நிலையத்தில் இருக்கும்போது மட்டுமே பணத்தினை மீள் பெற்றுக்கொள்ள முடியும்.
    - eZ Cash பணப்பையினை வைத்திருத்தல் கட்டாயமாகும்.
    - சம்பத் வங்கியின் SMS வங்கிச் சேவையுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் இலக்கம் மற்றும் eZ cash பணப்பை பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் இலக்கம் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.