English | Sinhala

eZ Cash CEB/ Water Bill promotion

  • ஏதேனுமொரு eZ Cash விற்பனையாளரிடம் சென்று, USSD ஊடாக #111# டயல் செய்து அல்லது eZ Cash வாடிக்கையாளர் App ஐ பயன்படுத்தி இலங்கை மின்சார சபைக்கான கட்டணம் மற்றும் நீர் கட்டணங்களை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த செயற்றிட்டம் செல்லுபடியாகும்.
  • இந்த செயற்றிட்டம் (2022 மே 18 முதல் - ஆகஸ்ட் 15) மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும்
  • ரூ. 1000/- வரையிலான பில்களுக்கு மட்டுமே 100% விலைக்கழிவு பொருந்தும். ரூ. 1000/- க்கு அதிகமான எந்தவொரு பில் பெறுமதிக்கும் ரூ. 1000/- மட்டுமே விலைக்கழிவாக வழங்கப்படும்
  • ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 1000 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் (500 CEB வாடிக்கையாளர்கள் மற்றும் 500 நீர் வாரிய வாடிக்கையாளர்கள்). மூன்று மாதங்களுக்கு மொத்தம் 3000 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  • இந்த செயற்றிட்டத்திற்கு தகுதிபெற குறைந்தபட்ச அல்லது அதிகபட்ச பில் பெறுமதிகள் அவசியமில்லை.
  • செயற்றிட்ட காலத்தில் அசல் பில் கட்டணம் செலுத்தப்பட்டால் அடுத்த மாத பில்லுக்கு விலைக்கழிவு வழங்கப்படும்.
  • செயற்றிட்ட காலத்திற்கான பில் கட்டணங்களும் ஏனைய மாதங்களுக்கான பில் கட்டணங்களும் செயற்றிட்ட காலத்தின் போது செலுத்தப்படும் பில் கட்டணங்களும் விலைக்கழிவிற்கு தகுதி பெறும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாதாந்த வெற்றியாளர்களும் அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்குள் update செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார்கள். வெற்றியாளர்களுக்கு SMS மூலம் அறிவிக்கப்படும், பெயர் eZ cash இணையதளத்தில் update செய்யப்படும்.
  • செயற்றிட்ட காலங்களில் வெற்றிகரமான மின்சாரம் மற்றும் நீர் கட்டணம் செலுத்தும் பரிவர்த்தனைகள் மட்டுமே வெகுமதிகளை மதிப்பிடுவதற்கு பரிசீலிக்கப்படும்.
  • இது ஒரு வரையறுக்கப்பட்ட கால சலுகையாகும்இ மேலும், வாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு விளக்கமும் அளிக்காமல் செயற்றிட்ட காலத்தின் போது எந்த நேரத்திலும் செயற்றிட்ட பொறிமுறையை மாற்றவோ, திரும்பப் பெறவோ அல்லது மூடுவதற்கான உரிமையை DAP கொண்டுள்ளது.
  • செயற்றிட்டம் தொடர்பான விடயங்கள்இ கேள்விகள் மற்றும் புகார்கள் தொடர்பான DAP யின் முடிவு இறுதியானது